என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ரஷியா தலையீடு
நீங்கள் தேடியது "ரஷியா தலையீடு"
அமெரிக்க தேர்தலில் ரஷியா தலையீடு தொடர்பாக நடந்து வரும் விசாரணையை 2 நாட்களுக்கு முன்னர் கடுமையாக விமர்சித்த டிரம்ப், தற்போது புலனாய்வு அமைப்புகளின் முடிவுவை ஏற்றுக்கொள்வதாக பல்டி அடித்துள்ளார். #Trump
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் ஆகிய இருவரும் கடந்த திங்கள் அன்று பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கி நகரில் சந்தித்து பேசினர்.
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷிய உளவுத்துறையின் தலையீடு தொடர்பாக ராபர்ட் முல்லர் குழு விசாரணை நடத்தி வருவது இரு நாடுகளுக்கும் இடையே மோசமான உறவு உருவானதற்கு முக்கிய காரணம் என்பதை குறிப்பிடும் விதமாக டிரம்ப் ட்வீட் செய்திருந்தார்.
அமெரிக்காவின் இத்தனை ஆண்டுகால முட்டாள்தனமும் ரஷியா உடனான பகைக்கு காரணம் என டிரம்ப் ட்வீட்டியிருந்தார். மேலும், புதின் உடன் செய்தியாளர்களை சந்திக்கும் போது, ராபர்ட் முல்லர் விசாரணை பேரிடராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
சொந்த நாட்டின் மீதே டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. டிரம்ப் கட்சியை சேர்ந்தவர்களே அவரை விமர்சிக்க தொடங்கினர். எதிர்ப்பலைகள் உருவானதை அடுத்து, அவற்றை எதிர்கொள்ளும் விதமாக டிரம்ப் தனது முந்தைய கருத்தில் இருந்து பல்டி அடித்துள்ளார்.
‘2016 தேர்தலில் ரஷியா தலையீடு என்ற அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறேன். ரஷியா ஏன் தலையீட்டுக்கான காரணத்தை நான் பார்க்கவில்லை என கூற விரும்பினேன். ஆனால், மாற்றி பேசிவிட்டேன். அமெரிக்க புலனாய்வு அமைப்பின் விசாரணை மீது முழு நம்பிக்கையும், ஒத்துழைப்பையும் அளிப்பேன்’ என டிரம்ப் தற்போது விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்காவில் இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்களின் முட்டாள்தனமே ரஷியா உடனான உறவு சீர்குலைந்ததற்கு காரணம் என டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். #TrumpPutinSummit #HelsinkiSummit
ஹெல்சின்கி:
அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் சந்திப்பு பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி நகரில் நடந்துள்ளது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் பனிப்போர் நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு மிக முக்கியமான ஒன்றாக உலகம் முழுவதும் கருதப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷிய உளவுத்துறையின் தலையீடு தொடர்பாக ராபர்ட் முல்லர் குழு விசாரணை நடத்தி வருவது இரு நாடுகளுக்கும் இடையே மோசமான உறவு உருவானதற்கு முக்கிய காரணம் என்பதை குறிப்பிடும் விதமாக டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.
‘ரஷியா உடனான நமது உறவு மிகவும் மோசமான சூழலுக்கு சென்றதற்கு பல ஆண்டுகால அமெரிக்காவின் முட்டாள்தனத்திற்கு நன்றி. தற்போதைய தேடலுக்கும் (ராபர்ட் முல்லர் குழுவின் விசாரணை) நன்றி’ என அவர் ட்வீட் செய்துள்ளார்.
ரஷிய வெளியுறவு அமைச்சகம் டிரம்ப்பின் ட்விட்டை லைக் செய்ததோடு, ரீ-ட்வீட் செய்துள்ளது. எனினும், சொந்த நாட்டின் மீது டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளதற்கு பலர் எதிர்ப்பு கருத்தும் பதிவிட்டு வருகின்றனர்.
2014-ம் ஆண்டு மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். #MH17investigation #Russianinvolvement #VladmirPutin
மாஸ்கோ:
உக்ரைனில் கடந்த 2014-ம் ஆண்டு அரசியல் நிலையற்ற தன்மை ஏற்பட்ட போது, கிரீமியா பகுதி மக்கள் ரஷ்ய கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்தனர். இதனால், ரஷ்யா ராணுவ படைகள் கடந்த 2014-ம் ஆண்டு கிழக்கு உக்ரைன் பகுதிக்குள் ஊடுருவி கிரீமியா பகுதியை மீண்டும் ரஷ்யாவுடன் இணைத்தது.
அந்தாண்டில் ஜூலை 17-ம் தேதி, மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச்-17 விமானம் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பயணிகளுடன் சென்றது.அப்போது ஒரு ஏவுகணை இந்த விமானத்தை தாக்கியதில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார் என அறிய சர்வதேச அளவில் கூட்டு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவின் விசாரணை அறிக்கையின்படி, ரஷ்யாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை பிரிவிலிருந்துதான் பக்-டெலர் ரக ஏவுகணை ஏவப்பட்டு, மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதாகவும், ஆனால் ஏவுகணையை உபயோகித்தது யார் என்பது குறித்து தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நெதர்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஸ்டெப் பிளாக், விமானம் தாக்கப்பட்ட சம்பவத்தில் ரஷ்யாவிற்கு நேரடி தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஸ்டெப் பிளாக்கின் இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு, ரஷியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். #MH17investigation #Russianinvolvement #VladmirPutin
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X